மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம்
shock
shock

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டறை பெருமந்தூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு டிபன் கடையை நாராயணபுரம் பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தன் வீட்டில் இருந்தபோது செல்வி கிரைண்டரில் மாவு அறைத்துள்ளார். அப்போது ராகவன் அங்கு வந்து கிரைண்டர் மீது கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.

இதனையடுத்து மகன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதை கண்ட செல்வி அலறி கூச்சலிட்டார்.

அதன்பின் அவரது வீட்டில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.