வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்!

Published:

vadivelu 3
vadivelu 3

விரைவில் தான் சொந்தமாக படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் நடிகர் வடிவேலு விருப்பம் இருந்தால் நடிக்கலாம் என நடிகை மீரா மிதூன் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் வாட்ஸ் ஆப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பங்கேற்று பேசினார். அதில், பத்து வருடங்களாக எந்த படத்திலும் நடிக்க முடியவில்லை. அதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன். இது மிகவும் வேதனையாக உள்ளது. உடலில் தெம்பு உள்ளது, நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என்று கூறிய வடிவேலு, “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடல் வரும் “வஞ்சத்தில் வீழ்ந்தேனடா…” என்ற வரியை பாடி கண்கலங்கினார்

வடிவேலுவின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும், அவருடைய ரசிகர்கள் பலரும் வடிவேலுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

meera-midhun
meera-midhun

இதுதொடர்பாக நடிகை மீரா மிதூன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடிவேலு பேசிய வீடியோவை நானும் பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று அவர் வருத்தப்பட்டு உள்ளது வேதனையாக உள்ளது. வாழ்க்கையில் பல உயரங்களை கண்டவர்களை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனால் அவர்களை விட்டு விலகிவிடவும் முடியாது. இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

நீங்கள் நடித்த தெனாலிராமன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்று தெரியாத கதாநாயகன் பலர் நடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் நீங்கள் ஒரு சகாப்தம், கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கவுள்ளேன். அதில் நடிக்க விருப்பம் இருந்தால், நீங்கள் நடியுங்கள். அப்படி நடந்தால் அது எனக்கு பெருமையாக இருக்கும் என்று மீரா மிதூன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img