தங்கத்தைக் கடத்தி சுங்கத்திடம் மாட்டிய இளைஞன்! தங்கத்தை முழுங்கி தப்பிக்க முயற்சி!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி
Trichy airport 1 - 2026

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரின் சோதனையின் போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த அசாருதீன்(22) என்ற பயணி தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து தங்கத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முயன்ற போது அவர் திடீரென தங்கத்தை விழுங்கினார்.

gold
gold

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த நபரை உடனடியாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அசாருதீனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தங்கத்தை வெளியே எடுக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.