15 வயது மகளை காணவில்லை: பதறி துடித்த பெற்றோர்!

கிரைம் நியூஸ் சற்றுமுன்
kitnap
kitnap

பிளஸ் 1 படிக்கும் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் கும்பக்கரை பகுதியில் வசித்து வரும் பேக்கரி கடை ஊழியரான தங்கராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.