கடவுள் பழனிச்சாமியை தரிசிப்பதற்கு முன் முதல்வர் பழனிசாமியை சந்தித்தேன் : தமிழிசை!

Published:

IMG-20210130-WA0026

கடவுள் பழனிச்சாமியை தரிசிப்பதற்கு முன் முதல்வர் பழனிசாமியை சந்தித்தேன் நீண்ட நாள் கோரிக்கையான தைப்பூச விழா விற்கு அரசு விடுமுறை அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்… என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அரசியல் தளத்தில் அதாவது நான் இன்னைக்கு அரசியல் வாதியாக இல்லாமல் ஆளுநராக வந்துள்ளேன்.

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்.

இன்று மகாத்மா காந்தி நினைவு தினம் அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு நான் இங்கு வந்திருக்கிறேன்.
எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தில் நான் வந்தடைந்த பொழுது தமிழக முதலமைச்சர் இங்கே வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு நான் அவரை சந்தித்தேன்.

இன்று மதுரைக்கு வந்து இருப்பதன் நோக்கம் மதுரை வழியாக பழனிக்கு போகிறேன். பழனி மலை சுப்ரமணிய சாமியை பார்க்க போகிறேன்.

கடவுள் பழனிச்சாமியை பார்ப்பதற்கு மதுரை வந்தடைந்த போது முதல்வர் பழனிசாமியை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இறைவன் பழனிச்சாமிக்கு தைப்பூசத்திற்கு விடுமுறை கொடுத்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி சொன்னேன்.

தைபூச விழாவிற்கு நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதனால தமிழகத்தில் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் .

கொரானா தொற்று முழுவதுமாக நீங்குவதற்கு எல்லாரும் தடுப்பூசி போட்டுஅனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அதற்காகத்தான் பழனி முருகனை சென்று வழிபட இருக்கிறேன்.
இன்று மாலை மீனாட்சி அம்மனை பார்த்துவிட்டு பழனி முருகனை தரிசிப்பதற்காக செல்கிறேன்.

வந்திருக்கிற அனைவரும் நலமாக இருக்க வேண்டும் பத்திரிகை சகோதர்களுக்கு எப்பொழுது போல் எனது அன்பு வாழ்க்கள் என தெலுங்கானா ஆளுநர்
தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Related articles

Recent articles

spot_img