மக்கள் தலையெழுத்தை மாற்ற முடியாது: புதிய ஸ்டூடியோவில் இளையராஜா பேட்டி!

iliyaraja-1
iliyaraja-1

இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. அவருடைய அறைக்கு பூட்டு போட்டதில் ஆரம்பித்து நீதிமன்றத்தில் கன்டிஷன்களை அடுக்கியது வரை பிரசாத் ஸ்டூடியோ மீதான அதிருப்தி அதிகரித்தது. கடைசியாக ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் தியானம் செய்யவும், தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பிரசாத் ஸ்டூடியோவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட போதும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

பிரசாத் ஸ்டூடியோவில் அவர் பயன்படுத்திய அறையே இல்லை என்றும், பொருட்கள் அனைத்தும் குடோனில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் கேள்விப்பட்டு இசைஞானி மன உளைச்சலுக்கு ஆளானர்.

illayaraja-1-1
illayaraja-1-1

தன்னுடைய அறையே இல்லாத போது அங்கு சென்று என்ன செய்யப்போகிறேன் என பிரசாத் ஸ்டூடியோ செல்லும் திட்டத்தையே கைவிட்டார். அதன் பின்னர் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை அமைக்க திட்டமிட்டு வந்தார்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி தனக்கான ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார். அதற்கான பூஜை இன்று காலை நடைபெற்றது. புதிய ஸ்டூடியோவில் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கான இசை வேலைகள் இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளன.

illayaraja-2
illayaraja-2

இந்த நேரத்தில் இளையராஜாவிடம் இனி தமிழ் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான பாடல்களை கொடுக்க போகிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளையராஜா, “மழை கொட்டுற நேரத்தில் கொட்டப்போகுது. மியூசிக் என்ன நேரத்தில் வருதோ? அதுதான். நாங்க போடுற பாட்டை தான் மக்கள் கேட்டாகனும். அது தலையெழுத்து. மாத்த முடியாது” என பதிலளித்துள்ளார். புது ஸ்டூடியோவிற்கு பூஜை போட்ட அன்றே இளையராஜா இப்படி பேசியிருப்பது ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories