தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் யானைகளுக்கு ஆண்டு தோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான யானைகள் புத்துணார்வு முகாம் நாளை மறு நாள் மேட்டுபாளையம் தேக்கம்பட்டியில் தொடங்குகிறது.
இதையடுத்து நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோவிலில் உள்ள வள்ளி யானைக்கு இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கனரக வாகனத்தில் யானை வள்ளியை ஏற்றி மேட்டுபாளையத்தில் உள்ள தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்