நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை தொடர்பான ஆலோசனை கூட்டம்

சற்றுமுன்
நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை  விரிவாக்க பணிக்கு நிலம் கையப்படுத்துதல் சம்பந்தமாக கலந்தாய்வுகூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில்   நடந்தது.

நெல்லை – தென்காசி இடையேயான 49 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்வது தொடர்பான நில கையப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தென்காசி தாலுகா கல்லூரணி கிராமத்தில் நில எடுப்பு செய்யப்படும் நில உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் குணராமநல்லூர், குலசேகரப்பட்டி, கல்லூரணி ஆகிய கிராமங்களில் நில எடுப்பில் பாதிக்கப்படும் நபர்களும் கலந்து கொண்டனர். மேலும் நில உரிமையாளர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கப்படும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியவர்வு தொடர்புடைய பலன்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் 4 வழிச்சாலை தற்பொழுது இருக்கும் சாலையின் அகலம், கட்டிடங்கள் குறைவாக உள்ள இடங்களில் 35 மீட்டர், அதிக கட்டிடங்கள் உள்ள இடங்களில் 25 மீட்டர், பாலம் கட்டும் இடங்களில் 31 மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும் இங்கு அமைய உள்ள ரயில்வே பாலம்  ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும்.  விரிவாக்க சாலை எந்த அளவில் உருவாகுகிறது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை பேன்ற வசதிகள் செய்து தருவது குறித்தும் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் மூலம் தனியாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட உரிமையாளர்கள் சார்பில் நில எடுப்பில் கையப்படுத்தப்படும்  நிலம் மற்றும்   கட்டிடங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் உயர்த்தப்ப்டட இழப்பீடு வழங்க கோரிக்கைகள் முன்வைத்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவிப் பொறியாளர் சதீஷ்பாண்டியன், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயராமன், தனி வட்டாட்சியர் சேதுராமலிங்கம், கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஹமீதா பானு, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் இன்று ஐந்தாம் தேதி வெள்ளிக் கிழமையும் நடைபெறும். மேலும் அடுத்த வாரம் முதல் அளவு இடப்படும் என்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மார்ச் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.