18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை ஒத்திவைப்பு

சற்றுமுன் சென்னை தமிழகம்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப் படுவதாக – சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்று  முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலாவை தலைவராக ஏற்க முடியாது என பன்னீர்செல்வம் தலைமையிலான குழு முடிவு செய்தது என்று முதல்வர் தரப்பில் கூறப்பட்டது.
சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்ததால், பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர் தரப்பு பதிலளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.