குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால் டெங்கு காய்ச்சல் பரவியது: மத்திய குழு அறிக்கை

சற்றுமுன் தமிழகம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. 23 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பலர் இறந்தனர். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசுதோஸ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்திய குழுவினர் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். அதில் தமிழகத்தில் டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆனதற்கு, குடிநீர் வினியோகம் சீராக இல்லாததும் ஒரு காரணம் என்று கூறியுள்ளனர். இதனால் குடிநீர் வரும் நாட்களில் மக்கள் அதை பாத்திரங்களில் பிடித்து அதிகளவு சேமித்து வைக்கிறார்கள். இந்த தண்ணீரை அவர்கள் முறையாக பராமரிக்காததால் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகியதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.