திமுக., கூட்டியிருக்கும் அதே நாளில் அதிமுக., சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்!

Published:

admk executive meeting1 - 2026

அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பினை ஓபிஎஸ்., ஈபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து இருவரும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

தமிழக சட்டப்பேரவையில் 2019- 20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது!

இதை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழகத்தில் ஜூன் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30க்கு கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது

இந்தக் கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதிமுக தலைமை செயலகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது!

anna arivalayam - 2026முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் வரும் 28ம் தேதி திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக கொறடா சக்கரபாணி அறிவித்திருந்தார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வரும் 28ம் ேததி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்… – என்று கூறியிருந்தார்.

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை  நடைபெறும்.

தமிழக சட்டப்பேரவை 23 நாட்கள் நடைபெறும். அனைத்து நாட்களிலும் கேள்வி பதில் இடம் பெறும்.  மறைந்த உறுப்பினர்களுக்கு 28-ந்தேதி இரங்கல்  தீர்மானம் நிறைவேற்றப்படும்.  29, 30-ந்தேதி அரசு விடுமுறை.

  • ஜூலை 1-ந்தேதி வனம், சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

  • ஜூலை 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும்.

  • ஜூலை 3ம் தேதி கூட்டுறவு, உணவுத்துறை  மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும்.

  • ஜூலை 4ந் தேதி  எரிசக்தி துறை,  ஆயத்தீர்வு துறை  மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img