தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தாயார் மரணம்..!

Published:

GKMW - 2026

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவிலில் கஸ்தூரி மூப்பனாரின் இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மறைந்த ஜி.கே.மூப்பனார் மனைவி கஸ்தூரி. முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் காலமானார்.

கஸ்தூரி அம்மாள் சொந்த ஊரான கும்பகோணம் சுந்தரப்பெருமாள் கோயிலில் தனியாக வசித்து வந்தார்.

மூப்பனார் கட்சி, சென்னை, டெல்லி என சுற்றி சுற்றி வருவதால் கஸ்தூரி அம்மாளை கண்டு கொள்வதில்லை. மூப்பனார் பெரும்பாலும் பெல்லி வெஸ்டர்ன் கோர்ட் பங்களாவில் தான் தங்கி இருப்பார்.

மனைவியை எங்கும் அழைத்துச் செல்லாத ஒரே தலைவர் மூப்பனார். கஸ்தூரி அம்மாளுக்கு மட்டும் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உண்டு.

மூப்பனாருக்கு ரங்கசாமி மூப்பனார், சம்பத் மூப்பனார், சுரேஷ் மூப்பனார் என மூன்று சகோதரர்கள். அவர்களில் ரங்கசாமி மூப்பனார் கடந்த மார்ச் மாதம் காலமானார். கோவிந்தசாமி மூப்பனாரின் மகன் கருப்பையா மூப்பனார். அவரது மகன் கோவிந்த வாசன் எனப்படும் ஜி.கே.வாசன்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img