ஹாயா இந்த சோயா கிரேவி செஞ்சு அசத்துங்க !

அடடே... அப்படியா? சமையல் புதிது நலவாழ்வு

soya - 2026சோயா கிரேவி

தேவையான பொருட்கள்:

குட்டி சோயா       – ஒரு கப்
தக்காளி               – 2
வெங்காயம்         – 2

அரைக்க:

தேங்காய் துருவல்  – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி                     –   ஒரு துண்டு
பூண்டு                     – 6 பல்
சோம்பு                    – சிறிதளவு
மிளகாய் தூள்          – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி                    – 6

தாளிக்க:

சோம்பு                    – சிறிதளவு
பட்டை                    – 2

செய்முறை:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.

சோயாவை(மீல் மேக்கர்) சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.  பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.

பின் சோயவையும் சேர்த்து வதக்கவும்.  5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.  பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.

இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.

குறிப்பு: காரம் தேவைக்கு தகுந்தாற் போல், அதிகப்படுத்திக்கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.