ரோட்டை மறித்து வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தினா… செவ்வாய்க்கிழமை நாங்க அனுமன் சாலீஸா சொல்வோம்! ஏட்டிக்குப் போட்டி!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

bengal bjpym - 2026

வெள்ளிக்கிழமைகளில் சாலைகளை மறித்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை இனியும் போலீஸார் அனுமதித்தால், நாங்கள் செவ்வாய்க்கிழமைகளில் அனுமன் ஆலயங்களுக்கு அருகே அமர்ந்து ஹனுமான் சாலீஸா பாடுவோம் என்று பாஜக.,வின் யுவ மோர்சா இளைஞர்கள் கூறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நமாஸ் செய்து சாலையை மறித்து போக்குவரத்தை தடை செய்வதை எதிர்த்து, மேற்குவங்க இளைஞர்கள் ஹனுமான் சாலீசா சொல்லி நிகழ்ச்சி நடத்தினர். வங்க பாஜக இளையோர் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை நேற்று ஹௌரா சாலையில் ஹனுமான் சாலிசா சொல்லிக்கொண்டு சாலையில் அங்கே உள்ள அனுமன் கோயிலை ஒட்டி அமர்ந்து பாடலைப் பாடினர்!

வெள்ளிக்கிழமை நமாஸ் செய்து சாலையை மறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும் இது  அமைந்ததாக கூறினார் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா வின் தலைவர் ஓ.பி. சிங்.

அவர் இது குறித்துக் கூறிய போது ஜி டி சாலையில் வெள்ளிக்கிழமை நமாஸ் செய்கிறோம் என்ற போர்வையில் சாலையை மறித்து போக்குவரத்தை தடை செய்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்! இந்த தொழுகையால், பல நேரங்களில் குழப்பம் ஏற்படவும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் காரணமாக அமைந்து விடுகிறது!

bjpym bengal - 2026இது மக்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் துரோகம் மற்றும் இடையூறு! இந்த நேரத்தில் பல்வேறு நோயாளிகள், அவசர கதியில் கொண்டு செல்லப்பட வேண்டியவர்கள், அலுவலகம் சென்று வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர்! மம்தா பானர்ஜியின் ஆட்சியில் கிராண்ட் டிரங்க் ரோடில் மற்றும் வேறு சில முக்கிய சாலைகளில் வெள்ளிக்கிழமை நமாஸ் என்ற போர்வையில் சாலைகளை தடுத்து நிறுத்துவதால் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம்.

இந்த நேரத்தில் நோயாளிகள் பலர் மரணித்து இருக்கின்றனர்! மக்கள் இயல்பாக தங்களது அலுவலகங்களுக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர் இதுவே மேலும் தொடர்ந்து கொண்டிருந்தால் நாங்களும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் சாலை அருகே பொது இடத்தில் ஹனுமன் ஆலயங்களுக்கு அருகே அமர்ந்து கொண்டு, ஹனுமான் சாலீசா  சொல்லத் தொடங்குவோம் என்று அவர்கள் கூறினர்

நமாஸ் என்ற பெயரில் சட்டவிரோதமாக பொது இடங்களை ஆக்கிரமித்துக் கூடுவது,  சாலை மறிப்புகள் மற்றும் விதி மீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை! இந்த நிலையில் ஹிந்து இயக்கங்கள் இவ்வாறு சாலையை மறித்து பொது இடங்களில் தொழுகை நடத்துவதை தடை செய்யுமாறு ஹரியானா மாநிலத்தில் கேட்டுக் கொண்டிருந்தனர்! அதற்கு ஹரியானா முதல்வர் கட்டார் கூட மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு பதிலாக பொது இடங்களில் ஏன் தொழுகை நடத்த வேண்டும் என்று விமர்சித்திருந்தார்

அதுபோல் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அளித்த ஒரு தீர்ப்பில் பொது இடங்கள் தொழுகையை நடத்துவதற்கான இடங்கள் அல்ல என்று தெரிவித்திருந்தது!

அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் நாய்டா போலீஸ் செக்டார் 58 உள்ள நிறுவனங்களுக்கு ஒரு வழிகாட்டுக் குறிப்பு அனுப்பி இருந்தது! அதில் அருகிலுள்ள  பூங்காக்களில் அவரவர் நிறுவனத்தின் பணியாளர்கள் தொழுகை நடத்துவதற்காக கூடுவதை தடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தது!

அப்போது காவல்துறையினர் அந்த நிறுவனங்களுக்கு அளித்த அதிகாரபூர்வமான அறிவிப்பில், அவரவர் அலுவலகங்களை அல்லது மசூதிகளை தொழுகை நடத்துவதற்காக இடங்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொது இடங்களில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க கூடாது என்றும் அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது!

1 thought on “ரோட்டை மறித்து வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தினா… செவ்வாய்க்கிழமை நாங்க அனுமன் சாலீஸா சொல்வோம்! ஏட்டிக்குப் போட்டி!”

  1. சாலையில் இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு தான். மறுப்பதற்கில்லை. ஆனால் நாங்களும் போட்டிக்கு செய்வோம் என்றால் அதில் அர்த்தமே இல்லையே! நோயாளிகள் மரணிக்கிறார்கள். அலுவலகம் பள்ளி செல்பவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்றால், அனுமன் சாலிசா சொல்லும்போதும் அப்படித்தானே? இடையூறை அல்லாஹ்வும் சரி அனுமனும் சரி ஏற்கமாட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.