
மும்பையில் ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி போலீசாரால் கைது செய்யப்பட்டு இழுத்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை அவரது வீட்டினுள் நுழைந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
2018ம் ஆண்டு ஒரு ஆர்டிக்கெட் மற்றும் அவரின் தாயார் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், தங்களின் மரணத்திற்கு அர்னாப் கோஸ்வாமியே காரணம் என அவர்கள் கடிதம் எழுதி வைத்திருந்தனர். அது தொடர்பான வழக்கில்தான் தற்போது அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் தன்னை தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Vellithirai News



