
குழந்தைகள், சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நாடெங்கும் அதிகரித்து வருகிறது. பாலியல் தொல்லைகளை சந்திக்காமல் ஒரு பெண் தன் வாழ்வை கடக்கவே முடியாது என்கிற சூழலை ஆண் வர்க்கத்தினர் ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதில், ஏழை, நடுத்தர மற்றும் உயர் தர வர்க்க பெண்களும் அனைவரும் பொருந்துவர்.
இந்நிலையில், தனது 14 வயதில் பாலியல் தொல்லையை சந்தித்ததாக பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகள் ஐரா அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் ‘அந்த சூழல் வித்தியாசமாக இருந்தது. என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது. அந்த நபர் தெரிந்துதான் அதை செய்தாரா என்பதும் எனக்கு தெரியாது’ என தெரிவித்துள்ளார்.
பொதுவாக திரைத்துறையில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை அதிகம் சந்தித்து வருகின்றனர். தற்போது அதுபற்றி வெளிப்படையாக அவர்கள் பேச துவங்கியுள்ளனர். அதேநேரம், சாதாரண பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி பேச தயங்குகின்றனர். அதுபற்றி பேச நினைத்தாலும் அதற்கான களம் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.
Source: Vellithirai News



