நவ.4: வட இந்தியாவில் களைகட்டும் கர்வா சௌத் பண்டிகை!

Published:

IMG-20201104-WA0013

நவம்பர் 4 இன்று கர்வா சௌத் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப் படுகிறது.

மணமான பெண்கள் கணவன் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இன்றைய தினம் முழு உபவாசம் இருந்து மாலை நிலவுக்கு பூஜை செய்வது வழக்கம். சந்திரன் வந்த பின்பு ஒரு சல்லடையின் மறைவிலிருந்து கணவரை பார்ப்பது வழக்கம். இந்த கர்வா சௌத் சந்தர்ப்பமாக பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொள்வார்கள்.

IMG-20201104-WA0014

தம் வாழ்க்கை கூட கணவரோடு சேர்ந்து வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று கோருவார்கள். இந்த பண்டிகையை வட இந்தியாவில் மிகவும் ஆனந்தமாக இன்று கொண்டாடி வருகின்றனர்.

மணமான ஹிந்து பெண்களுக்கு இன்று மிகவும் விசேஷமான நாள். உபவாசமிருந்து பூஜைகள் செய்து சௌபாக்கியமும் கணவரின் ஆயுள் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.

கைநிறைய வண்ண வண்ண வளையல்களும் மருதாணியும் அணிந்து கொள்வார்கள். மங்களகரமான தினமாக பெண்கள் நினைப்பார்கள். இன்று மணப்பெண்ணை போல் அலங்கரித்து கொள்வார்கள்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img