
பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வட சென்னை என திரைப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனர் என புகழ் பெற்றார்.
தனுசின் நடிப்பில் அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. தற்போது சூரியை வைத்து ஒரு திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளார். அதன்பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை அவர் இயக்குகிறார்.
இந்நிலையில், நடிகர் சசிக்குமாருடன் ஒரு புதிய படத்தில் அவர் இணையவுள்ளார். ஆனால், அப்படத்தை அவர் இயக்கவில்லை. கதை, திரைக்கதை எழுதியதோடு இப்படத்தை கதிரேசனின் ஃபைவ் ஸ்டாட் கிரியோஷணுடன் இணந்து தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பின் துவங்கவுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் யார் என்கிற தகவலை படக்குழு வெளியிடவில்லை.
Source: Vellithirai News



