காந்தியை கௌரவப் படுத்தவே நினைத்தோம்: மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் நிறுவனம்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

mahatma image beer bottle - 2026

இஸ்ரேலின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று, மஹாத்மா காந்தி படத்தை மது பாட்டிலில் அச்சிட்டு, மது வகை ஒன்றை அறிமுகம் செய்தது.

ஆனால் இது இந்தியாவில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. மது, மாமிசம் உண்ண மாட்டேன் என்று சிறுவயதில் தாய்க்குக் கொடுத்த சத்தியத்தைக் காத்த காந்தியை கேவலப் படுத்துவது போல் உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னை நேற்று மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறினார்.

இதை அடுத்து, இஸ்ரேல் அரசிடம் இது குறித்து பதில் அளிக்குமாறு பேசப் பட்டது. இதைத் தொடர்ந்து ‘மகாத்மா காந்தியை கௌரவப்படுத்தவே நினைத்தோம். இருப்பினும் இந்திய மக்கள் மனத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்’ என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.