ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்: தேர்தல் அதிகாரி!

Published:

sathyapradha sahoo
sathyapradha sahoo

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சோதனைகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்றனர்.

இதனிடையே கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் செயலியின் மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் 15 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img