shivani - 2026

கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த தம்பதிகள் நாகராஜன்( 28 வயது) – சிவானி (22 வயது). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சிவானி பெற்றோர் திருமணத்தின்போது 95 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதனையடுத்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த சிவானிக்கு திடீரென கருசிதைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிவானிதான் காரணம் என்று நாகராஜன் குடும்பத்தினர் அடிக்கடி அவரை குத்திக்காட்டி பேசி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்

இந்நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சிவானியின் சமையல் சரியில்லை என்று அவருடன் தகராறு செய்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவானி தனது அறைக்கு சென்று கதவை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் சிவானி கதவை திறக்காததால் அவரின் குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே சிவானியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவானி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிவானியின் பெற்றோர் தனது மகளை கொடுமைப்படுத்தியதால் தான் அவர் இறந்துவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending