முகநூலில் உள்ள பெண்ணின் ஃபோட்டோவை எடுத்து ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டல்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
cell
cell

வேலூர் மாவட்டத்தில் உள்ள கரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 25 வயதான இளைஞர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார். இணைய தளத்தில் மோசடி வேலைகள் செய்து பொழுது போக்குவது இவருக்கு ஹாபி.

இந்நிலையில் அவரோடு ஒன்றாக கல்லூரியில் படித்த ஒரு பெண் அவரோடு சமூக ஊடகத்தில் தோழியாக இருந்துள்ளார். அந்த பெண்ணின் போட்டோவை ஊடக கணக்கிலிருந்து எடுத்த அவர் அதில் வேறு ஆபாச போட்டோவில் பொருத்தி மார்பிங் செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் போலியான ஆபாச போட்டோவை அவருக்கு அனுப்பி மிரட்ட தொடங்கியுள்ளார்.

அந்த போலியான போட்டோவை பார்த்து அதிர்ந்த அந்த பெண் அவரின் கணக்கை ப்ளாக் செய்து விட்டார். அதன் பிறகு அந்த பெண்ணின் வாட்ஸ் அப்பில் அந்த போட்டோவை அனுப்பி ஒரிஜினல் ஆபாச படத்தை அனுப்ப சொல்லி அவரை மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண் பணியவில்லை .

இதனால் அவர் அந்த போட்டோவை பல நண்பர்களுக்கு அனுப்பி அந்த பெண்ணை பற்றி அவதூறு பரப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் சமூக ஊடக கணக்கை தொழில் நுட்ப உதவியுடன் கண்டு பிடித்தார்கள். பின்னர் அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.