முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

சற்றுமுன் தமிழகம்
sathya sahu
sathya sahu

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுவது குறித்து சில நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம்.

இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

மற்ற மாநிலங்களில் நாளை (27ம் தேதி) காலை 7 மணியில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி மாலை 7.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்ட தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் (ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணிக்கு பிறகு) ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிறவாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.