20000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!

சற்றுமுன் தமிழகம்
police 1 - 2026

கும்மிடிப்பூண்டி அருகே புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரிடம் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கும், பெருவாயல் கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்பவருக்கும் வீடு கட்டியதற்காக பணம் கொடுக்கல் – வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கவரப்பேட்டை காவல் நிலையத்தில் காந்திமதி, ஜெகதீசன் மீது புகார் அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிவராஜ், புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க தனக்கு ரூ.20,000 லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டதாக கூறி, திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார் ஜெகதீசன்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை ஜெகதீசன், உதவி ஆய்வாளர் சிவராஜிடம் ஆரணி பகுதியில் வழங்கினார்.

அப்போது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காவல் உதவி ஆய்வாளர் சிவராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.