அருவருப்பை அள்ளித் தெளிக்கும் ஆ ராசா!

சற்றுமுன் தமிழகம்
rasa - 2026

திமுக ஆட்சிக்கு வந்ததும் மணல் திருட்டுக்கு அனுமதி தருகிறேன். தடுக்கும் அதிகாரிகளை அதிகாரத்தில் இருந்தே தூக்கிவிடுகிறேன் என்று பேசி செந்தில்பாலாஜி பேசியது திமுகவுகு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம் அதிகமாகும் என்பதை இப்பவே நிரூபிக்கிறார்கள் என்று அச்சம் ஏற்பட்டிருக்கிறது மக்களிடையே.

செந்தில்பாலாஜி இப்படி ஒருபக்கம் ரவுடியிசப்பேச்சை கிளப்பிவிட்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் ஆபாச பேச்சை அவிழ்த்துவிட்டு பெண்கள் வாக்குகளை சிதறடித்திருக்கிறார் திண்டுக்கல் ஐ.லியோனி. பெண்களின் இடுப்பு பற்றிய அவரது பேச்சு பற்ற வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை.

செந்தில்பாலாஜி -ரவுடியிசம், லியோனி – ஆபாசம் , ஆ.ராசா- அருவருப்பு என்று சொல்லத்தக்க வகையில் ஆ.ராசா வழக்கம்போலவே அருவருக்கத்தக்க வகையில் பேசி மக்களிடையே அதிகம் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

இவர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு திமுகவுக்கு வெறூப்பை சம்பாதித்துக்கொடுத்து, அதிமுகவுக்கு வாக்குகள் சேகரித்து கொடுத்து வருகிறார்கள்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிமுகவுக்காக வாக்கு சேகரிப்பவர்கள் இவர்கள்தான்.

”ஓராண்டு காலம் அவர் கொடுத்த விளம்பரத்தால் அதில் கிடைத்த லாபத்தால் இன்றைக்கு இருக்கின்ற இவாள் பத்திரிகைகள் எல்லாம், அவரை மிகப்பெரிய தலைவர் போல் சித்தரிக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி? என்ன தியாகம்? பொதுவாழ்க்கையில் அவர் எட்டியிருக்கும் தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது.

நல்ல உறவில் ஆரோக்கியமான உறவில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை நம்முடைய தலைவர் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவம்தான் எடப்பாடி பழனிச்சாமி” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சித்திருக்கிறார்.

ஆ.ராசா பேசிய இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பேசும் பேச்சா இது? ஏன் இத்தனை கீழ்த்தரமாக இவர் கீழிறங்கி ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டும்? என்று எரிச்சலடைகிறார்கள் திமுகவினரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 13 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.