பயங்கர சத்தத்தால் பீதியான மக்கள்! இது தான் காரணமாம்!

சற்றுமுன் தமிழகம்
sound - 2026

தமிழகத்தின் சில பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் கொள்ளிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது பயங்கர வெடி சத்தத்துடனான நில அதிர்வு. காரைக்கால் பகுதியிலும் உணரப் பட்டதாகவும், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்று அதற்குப் பிறகு நில அதிர்வு உணர்ந்ததாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது என்று எந்த காரணமும் தெரியவில்லை. அதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

திடீர் வெடிச்சத்தமும் நில அதிர்வும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெடிச்சத்தம் குறித்து அந்த மாவட்ட மக்கள் கூறுகையில், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பின் தான் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.

வெடிச்சத்திற்காக காரணம் குறித்து சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாட்சியர் பிரான்சுவா, ராணுவ விமானமே வெடிச்சத்தம் கேட்டதற்குக் காரணம் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கப்படும் போது வெடிச்சத்தம் கேட்டதாகவும் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை நேரத்தில் கேட்ட வெடிச்சத்தம் பலரையும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கி விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.