குழந்தையோடு கள்ளக்காதலன் வீட்டில் தஞ்சம்! கூட்டி வந்து கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!

Published:

murder-1
murder-1

திருப்பூரில் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்ணை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததால் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த பாப்பன்ன செட்டியார் வீதியில் வசித்து வருபவர் மகேந்திரன் (35). இவருடைய மனைவி அனுசியா (25). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மகேந்திரன் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 24-ந் தேதி குழந்தையுடன் அனுசியா திடீரென்று மாயமானார். இது குறித்து மகேந்திரன் போலீஸில் புகார் அளித்து மனைவியை தேடி வந்தார்.

போலீஸ் விசாரணையில் அனுசியா தன் குழந்தையுடன் 15 வேலம்பாளையத்தில் உள்ள கள்ளக்காதலன் சதீஸ் வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதனால் அனுசியாவை போலீசார் அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் அனுசியா தனது கணவருடன் 15 வேலம்பாளையம் அம்மையப்பன்நகரில் உள்ள தனது தோழி சுதா வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

சுதா கணவன் மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் சுதாவை குழந்தையுடன் வெளியே இருக்க கூறி விட்டு மகேந்திரன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்த போது அனுசியா கழுத்தில் துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு, மயங்கிய நிலையில் கீழே கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அவர் சிகிச்சை பலனிற்றி நேற்று அதிகாலை இறந்தார்.

இது குறித்து அனுசியா கொடுத்த புகாரின் பேரில் கணவர் மகேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்காதலன் சதீஷையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img