Saint - 2026

இரவில் வேள்வி தீ யாகத்தில் இறங்க முயன்ற சித்தரை போலீசார் வந்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே உள்ள ஆலங்குடியில் காமாட்சி அருள் என்பவர் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீயில் இறங்கி யாகம் செய்யப்போவதாக சித்தர் ஒருவர் அறிவித்தார்.

இதையறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு நேரத்தில் ஒன்று திரண்டனர். மேலும் 8 அடி ஆழம் தோண்டிய குழியில் விறகுகளை அடுக்கி வேள்வி யாகம் என்ற பெயரில் அக்னி குண்டத்தில் இறங்கி சிறப்பு வழிபாடு செய்வதாக சித்தர் கூறியதை அடுத்து அதனை காண காத்திருந்தனர்.

மேலும் இந்த யாகத்தின் மூலம் சில மாதங்களில் இந்தக் கோவில் மாபெரும் கோட்டையாக உருவாக்கப்படும் எனக் கூறிக் கொண்டிருந்தார்.

yagam - 2026

அப்போது தகவலறிந்து திடீரென அந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். பின்னர் கோயில் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது என போலீஸார் சித்தரிடம் தெரிவித்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

பின்பு அங்கிருந்த கூட்டத்தை கலைத்து காவல்துறை முன்னிலையில் கட்டுப்பாடுகளுடன் வேள்வி யாகம் நடத்தப்பட்டது.

police - 2026

அந்த சித்தர் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த சொக்கநாதர் ஆவார். அவர் 27 ஆண்டுகளாக உணவை உட்கொள்ளாமல் உமிழ்நீரை மட்டுமே உட்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending