அஜித்தின் சோகத்திற்கு காரணம் என்ன? வைரலாகும் புகைப்படம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith3 - 2026

கடும் சோகத்திலும் டென்ஷனிலும் தல அஜித் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்கி வருகிறார்.

Ajith - 2026

படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து விட்டது. இருப்பினும் ஒரே ஒரு சண்டை காட்சியை ஸ்பெயினில் படமாக்க படக்குழு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அஜித்தின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

ajith1 1 - 2026

இப்படியான நிலையில் தற்போது தல அஜித் நேவி ப்ளூ கலர் உடையில் சோகமாகவும் கொஞ்சம் டென்ஷனாகவும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தலைக்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டென்ஷனா இருந்தாலும் தல ஸ்மார்ட் தான் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.