கேரள அரசின் இந்து விரோத நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக., எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
bjp mps in parliament - 2026

பாஜக எம்பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னர் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மீது கம்யூனிஸ கேரள அரசு கையாளும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மாநில அரசுத் துறைகளை ஏவி விட்டு, ஐயப்ப பக்தர்களை தாக்கியும் நசுக்கியும் செயல்பட்டு வரும் மாநில அரசின் போக்கைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜக., தலைவர்கள் மீது மாநில அரசுத் துறைகள் மேற்கொண்டு வரும் கண்மூடித்தன தாக்குதல்களைக் கண்டித்து பாஜக., எம்பி.க்கள் இன்று காலை மேற்கொண்ட போராட்டத்தில் நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

50ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது வழக்குகள் போடப் பட்டுள்ளன. பாஜக., மூத்த தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தாக்குதல் இலக்குக்கு உள்ளாகியுள்ளனர். மாநிலத்தின் பாஜக., பெண் தலைவர்கள் கைதாகி சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். ஆலயங்கள் கம்யூனிஸ்ட் குண்டர்களின் கண்மூடித்தன தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. மசூதிகளையும் கம்யூனிஸ்ட்கள் விட்டுவைப்பதில்லை. சமூக மட்டத்திலான தலைவர்களை காயப் படுத்துகின்றனர். ஆலய பூஜாரிகள் தாக்கப் பட்டுள்ளனர். இத்தகைய குண்டர்களின் ராஜ்ஜியத்தை நாம் கேரளத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகள் இப்போது பரவலாகி வலம் வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.