திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
உள்ளது இந்தப்பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு வந்த மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலை பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் உத்தரவின் பேரில் வசூலித்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்,கல்லூரணி, திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, , மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர் கருமடையூர், மூலக்கரையூர், செல்வவிநாயகபுரம், சிவநாடானூர், ராமச்சந்திரப்பட்டிணம், உள்ளிட்ட பல பகுதியிலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் இவ்வாண்டு 11ம் வகுப்பு சேர்க்கைக்கு சேரும் மாணவர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து ரூ.1000 முதல் 3500 வரை கட்டாய நன்கொடை என சுமார் 1.50 லட்சம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்று கொண்ட கலெக்டர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் மற்றும் கல்வி அதிகாரிகள் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் ஆய்வு நேற்று முன்தினம் நடத்தினர். மேலும் ஆய்வுக்காக அதிகாரிகள் வந்த சமயம் பள்ளியில் சேர்க்கைக்கு வந்த ஒருமாணவனின் தந்தை சமந்தப்பட்ட அதிகாரியிடமே பணத்தை கொடுக்க புகார் ஊர்ஜிதம் ஆனது இதையெடுத்து 11ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலித்தது தெரிய வந்தது. உடனடியாக நன்கொடை என வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து பணம் உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது
மேலும் இனி வரும் காலங்களில் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் கட்டாய நன்கொடை மற்றும் இதர கூடுதல் மறைமுக கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என்று எடுத்துரைத்தனர்.மேலும் எதற்கு அரசுப்பள்ளியில் நன்கொடைவசூலித்ததார்கள் என்பது தான் பெற்றோர் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது ,இதே நெல்லை மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளியில் சேர ஆசிரியர்கள் ,மிதிவண்டி,தங்ககாசு,அஞ்சலகசேமிப்புக் கணக்கு துவங்கி அதில் ரூ 1000 போட்டு ஊக்கப்படுத்தும் வேளையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது
நன்கொடை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் தென்காசி கல்வி மாவட்ட கல்வி அலுவலரை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
அரசுப்பள்ளியில் சேர கட்டாய நன்கொடை வசூல் அதிர்ச்சியில் பெற்றோர்
Popular Categories



