well
well

அரூர் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேலனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. விவசாயி. இவருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீனா (20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மீனா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கோட்டப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மீனாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 3 மாதத்தில் மீனா தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் குறித்து அரூர் ஆர்.டி.ஓ விசாரித்து வருகிறார்

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending