பேருந்து, ஆட்டோ, டாக்ஸி இயங்காது!

சற்றுமுன் தமிழகம்
private bus - 2026

தமிழக அரசு அறிவித்துள்ள மே மாதம் 24 ஆம் தேதி வரையிலான ஊரடங்கில், வேளாண் உற்பத்திக்கு தேவையான உரம், விதை, பூச்சி கொல்லி, மாட்டுத்தீவனம் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி செய்யப்படுகிறது.

சோமேடோ மற்றும் சுவிக்கி போன்ற இணையவழி நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்ந்த நிறுவனங்களின் பணியாளர்கள் அடையாள அட்டை அல்லது ஆவணத்துடன் சென்று வர அனுமதி செய்யப்படும்.

தற்போது நடைபெற்று வரும் கட்டிட பணிகள் மட்டும் மேற்படி செயல்பட அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். தடையின்றி செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பேருந்திலோ அல்லது சொந்த வாகனத்தில் நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி போன்றவையும் இயங்க தடை விதிக்கப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.