இன்ஸ்டாவில் மர்மநபர் வெளியிட்ட புகைப்படம்! கல்லூரி மாணவி தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
instagram
instagram

செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மர்மநபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தவறாக பதிவிட்டதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மலையடிவேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஸ்வேதா காணாமல் போனதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதன்படி, வீட்டின் அருகே இருக்கும் விவசாய கிணற்றில் ஸ்வேதா சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும், உடலை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஸ்வேதாவின் புகைப்படத்தை மர்மநபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தவறாக பதிவிட்டதால் மனமுடைந்த ஸ்வேதா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து மாணவி கைப்பட எழுதிய கடிதமும் சிக்கியுள்ளதாகவும் இது சம்பந்தமாக போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.