October 13, 2024, 10:52 PM
28.8 C
Chennai

பிரபல நடிகை உயிரிழப்பு! திரையுலகினர் இரங்கல்!

சென்குப்தா(71) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலாமானார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரபல பெங்காலி நடிகை சுவாதி லேகா சென்குப்தா. நாடக உலகில் நடித்து வந்த சுவாதி லேகா சென்குப்தா, 1984 ஆம் ஆண்டில், சத்யஜித் ரேயின் ‘கரே பியர்’படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

மித்ரா சாட்டர்ஜிக்கு ஜோடியாக பிமலாவாக, சுவாதிலேகாவின் நடிப்பை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

சத்யஜித் ரேயின் ‘கரே பைர்’, நந்திதா ராயின் ‘பேலா ஷேஷ்’, ராஜ் சக்ரவர்த்தியின் ‘தர்மஜுதா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பெங்காலி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த சுவாதிலேகா, சுதீப் சக்ரவர்த்தியின் ‘பரோஃப்’ படத்தில் கடந்த 2019 ல் நடித்திருந்தார். இதுதான் அவரது கடைசிப்படம்.

ALSO READ:  மதுரை மாவட்டத்தில் கன மழை!

திரையுலகில் இருந்து விலகி, தனது கணவர் ருத்ரபிரசாத் சென்குப்தா, மகள் சோஹினி ஆகியோரால் நடத்தப்பட்ட நந்திகர் நாடக குழுவில் தீவிரமாக இருந்தார்.

நாடக உலகில் இவர் ஆற்றிய சேவைக்காக 2011ல் சங்க நாடக அகாடமி விருதை வென்றார். நாடகத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக மேற்கு வங்க நாடியா அகாடமி விருதும் வழங்கப்பட்டது.

வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீரக நோயாலும் அவதிப்பட்டு வந்த சுவாதிலேகா, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகள் சோஹினி தெரிவித்துள்ளார்.

சுவாதி லேகாவின் மரணம் பெங்காலி சினிமாவுக்கு, நாடக உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரவெடி தடையை நீக்க சட்டப்படி நடவடிக்கை: எல்.முருகன் உறுதி!

தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு,பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்ல வந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி

சபரிமலை மண்டல மகரவிளக்கு சீஸன்; நவ.15ல் நடை திறப்பு!

திருத்தப்பட்ட நேரங்களுடன் கூடுதலாக, விர்ச்சுவல் வரிசையில் முன்பதிவு செய்பவர்களுக்கு 48 மணி நேர அருள் காலம் வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் கன மழை!

சாலையில் கழிவு நீர் ஒடின. மதுரை யாகப்ப நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தேங்கியுள்ள நீரில் இரண்டு வாகனத்தில் சென்ற இருவர் தவறி விழுந்தனர்.

நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

10ஆம் திருநாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மலர் சப்பரத்தில் வாணவேடிக்கை மேளதாளம் முழங்கிட கோவில்

ஜனகை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி அம்பு எய்தல்!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நடைபெற்றது