December 6, 2025, 9:42 AM
26.8 C
Chennai

யூரோ 2021: கோல்களுக்கு பஞ்சம்!

euro cup 2021
euro cup 2021

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

எட்டாம் நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடந்துள்ளன. அவையாவன :
(1) ஸ்வீடனுக்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையிலான குரூப் இ போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இந்திய நேரப்படி 18.06.2021 அன்று மாலை 1830 மணிக்கு நடந்தது.
(2) கிளாஸ்கோவில் இந்திய நேரப்படி 18.06.2021 அன்று இரவு 2130 மணிக்கு குரோஷியா மற்றும் செக் குடியரசிற்கு இடையே குருப் டி விளையாட்டு நடந்தது.
(3) இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையே குருப் டி போட்டி 19.06.2021 அன்று லண்டனில் 0030 நடைபெற்றது.

ஸ்வீடன் Vs ஸ்லோவாக்கியா (1-0, ஸ்வீடன் வெற்றி)

ஸ்லோவாக்கியாவை வென்றது ஸ்வீடன். பெனால்டி கோல் ஒன்றினை எமில் ஃபோர்ஸ்பெர்க் அடித்து 2ஆவது பாதியில் ஸ்வீடனுக்கு 1-0 என்ற முன்னிலை அளித்தார். விருவிருப்பு இல்லாத முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. யூரோ 2020இல் ஸ்லோவாக்கியா தனது இரண்டாவது வெற்றியைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற அந்த அணியின் மரேக் ஹம்சிக் கவனம் செலுத்தினார். போட்டியின் ஸ்வீடனின் தொடக்க ஆட்டம் ஸ்பெயினுக்கு எதிரான ஒரு மோசமான ஆட்டமாக இருந்தது, அதனால் அவர்கள் வெற்றி பெற நினைத்திருக்க வேண்டும்.

வருகின்ற புதன்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கிற இறுதி குருப் E ஆட்டத்தில் சுவீடன் போலந்தை எதிர்கொள்கிறது. ஸ்லோவாக்கியா இப்போது ஸ்பெயினுக்கு எதிரான ஒரு பெரிய போட்டியை அதே நாளில் செவில்லியில் நடக்கின்ற இறுதி குழு ஆட்டத்தில் ஆடவிருக்கிறாது.

எமில் ஃபோர்ஸ்பெர்க் அடித்த அந்த ஒரே பெனால்டி கோலைத் தவிர ஜான் ஓலோஃப் ஆண்டர்சனின் (மேனேஜர், ஸ்வீடன் அணி) அணி வீரர்களின் ஆட்டம் முதல் பாதியில் ரசிக்கும்படி இல்லை. ஆனால் இரண்டாவது பாதியில் நன்றாக ஆடினர். ஸ்லொவாகியாவின் கோல்கீப்பர் மார்ட்டின் டுப்ராவ்கா ஸ்வீடன் அணியின் ராபின் குய்சன் அடித்த பந்தினை கோலுக்குச் செல்லாமல் தடுத்தார். ஆயினும் ஸ்வீடன் அணியினர் ஸ்லோவாக்கியாவை களத்தில் சோதித்தனர். அப்போதுதான் ஃபோர்ஸ்பெர்க் 12 கெஜ தூரத்திலிருந்து ஒரு கோலை அடித்தார்.

euro 2021
euro 2021

குரோஷியா vs செக் குடியரசு (1-1, ஆட்டம் சமன்)

செக் குடியரசு இப்போது குழு D பிரிவில் நான்கு புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து பின்னர் விளையாடுகின்றன. செக் குடியரசு அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வெம்ப்லிக்கு பயணப்படுகிறது. குரோஷியா தங்களது முதல் புள்ளியைப் பெற்றுள்ளது, தங்கள் இறுதிக் குழு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.

குரோஷியாவும் செக் குடியரசும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்ற பின்னர் புள்ளிகள் பகிரப்படுகின்றன. குரேஷியா அணி வீரர் லோவ்ரன் தனது முழங்கையால் இடித்ததால் VAR செக் குடியரசுக்கு ஒரு பெனால்டி வழங்கப்பட்டது. அப்போது அரை நேரத்திற்கு முன்னதாக ஷிக் செக் குடியரசிற்கு 37ஆவது நிமிட்த்தில் ஒரு பெனால்டி கோல் அடித்து முன்னிலை அளித்தார். குரோஷியா இரண்டாவது பாதியில் ஒரு பிரகாசமான தொடக்கத்தைக் கண்ட்து. ஒரு ஃப்ரீ-கிக் விரைவாக எடுத்து பெரிசிக் பெட்டியின் இடதுபுறத்தில் இருந்து கோல் அடித்தர். எந்தவொரு அணியும் அதற்குப் பிறகு கோலடிக்க முடியவில்லை.

இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து (போட்டி டிரா 0-0)

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை வெம்ப்லியில் நடந்த குரூப் டி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் கோல் இல்லாமல் சமநிலையில் இருந்தன. ஸ்காட்லாந்துடனான மோதலுக்கு முன்னதாக குரோஷியாவுக்கு எதிரான தொடக்க யூரோ 2020 போட்டியில் வெற்றி பெற்றிருந்த அணியில் இங்கிலாந்து இரண்டு மாற்றங்களைச் செய்தது, ரீஸ் ஜேம்ஸ் மற்றும் லூக் ஷா ஆகியோரைக் கொண்டுவந்தது, ஸ்காட்லாந்து பயிற்சியாளர் ஸ்டீவ் கிளார்க் தனது அணியில் நான்கு மாற்றங்களைச் செய்தார்.

மூன்று சிங்கங்கள் அணி என அழைக்கப்படும் இங்கிலாந்து அணியின் (ஏனெனில் மூன்று சிங்கங்கள் அவற்றின் சின்னத்தில் உள்ளன) முதல் பாதியின் ஆரம்பத்தில் சிறப்பான வாய்ப்புகளைக் கொண்டிருந்தன, ஜான் ஸ்டோன்ஸ் தலையால் ஒரு பந்தை கோலுக்கு அடித்தார். மேசன் மவுண்ட் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க முயன்றார். இவையெல்லாம் ஆட்டம் தொடங்கி முதல் 20 நிமிடத்தில் நடந்தன.

இங்கிலாந்து அணியின் கோல் கீப்பரான ஜோர்டான் பிக்போர்ட், முதல் பாதிக்குச் சற்று முன்னர் ஒரு கோலைத் தடுத்தார். அவர் வலப்பக்கத்தில் கீழே விழுந்து ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் ஓ’டோனல் அடித்த கோலைத் தடுத்தார். இப்போட்டியின் முடிவு இங்கிலாந்தை அடுத்த கட்ட்த்தை நோக்கி நகர்த்தும். வரும் செவ்வாயன்று அவர்கள் இக்குழுவில் முதலிட்த்தில் இருக்கும் செக் குடியரசுடன் விளையாட இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஸ்காட்லாந்து மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் கிளாஸ்கோவில் தலா ஒரு புள்ளியுடன் விளையாடவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories