December 6, 2025, 7:14 AM
23.8 C
Chennai

மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கை: 14 வயதிற்கு கீழ் குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

vaccine - 2025

மூன்றாவது அலையை எதிர்கொள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஸ்ரீ ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வெல்லம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரமும், இரும்புக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.5 ஆயிரமும், மீன், இறைச்சி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.60 ஆயிரமும், பேரணாம்பட்டு அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரமும், வேலூர் நேதாஜி காய்கனி வணிகர் சங்கம் சார்பில் ரூ.55 ஆயிரமும், வேலூர் ஜெயின் சங்கம் சார்பில் ரூ.21 ஆயிரம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கப்பட்டது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ”வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைப்படி பெரும் உயிர் இழப்புகளை தவிர்த்தோம். இரண்டாவது அலையில் பெரிதும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளை பாதுகாக்க 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு மூன்றாவது அலையை எதிர் கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு, ஜெயின் சங்கத் தலைவர் ருக்ஜி ராஜேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories