கைதியின் ஏடிஎம் கார்டை வாங்கி ரூ.4 லட்சம் திருடிய காவலர்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
ranjith - 2026

கைதியிடமிருந்து பணத்தை திருடிய காவலரை சஸ்பென்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஷாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சின்னகானூரில் உள்ள இரும்பு ஆலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரும்பு திருடிய வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

திருட்டப்பட்ட இரும்பை வாங்கிய அன்னூரை சேர்ந்த இரும்பு வியாபாரி ஆனந்தனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஏ.டி.எம் கார்டு பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை வாங்கிய காவலர் ரஞ்சித் அதில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தன் வங்கி கணக்கை சரி பார்த்த போது 4 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்டது தெரியவந்தது

இதனையடுத்து ஆனந்தன் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது காவலர் ரஞ்சித் பணத்தை எடுத்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஷாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.