manimegalai - 2026

திருமணமான 3 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள நத்தமேடு பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்த மணிமேகலை என்ற மகள் இருந்துள்ளார்.

இந்நிலையில் பண்ருட்டி பகுதியில் வசித்து வரும் குப்புசாமி என்பவருக்கும், மணிமேகலைக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

நேற்று தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த மணிமேகலை எதுவும் சொல்லாமல் தனது அறைக்குள் வெகுநேராமகியும் காணவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிமேகலையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புவனகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமேகலையின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து திருமணமாகி மூன்றே நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending