நடிப்பு ஆசைக்காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை! இயக்குனர் கைது!

Published:

vankodumai - 2026

தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த காவல்துறை தம்பதி மகள் 17 வயது சிறுமி ஆன்லைன் படிப்புக்காக வாங்கிய செல்போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியுள்ளார்.

அப்போது அவருக்கு அறிமுகமான சத்யபிரகாஷ் என்பவர், தான் ஒரு சினிமா இயக்குனர் என்றும் உன்னையும் நடிகையாக்குகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

இதனை அடுத்து அவர் அந்த சிறுமியிடம் நெருக்கமாக பழகி அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சத்யபிரகாஷை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்

இந்த நிலையில் சத்யபிரகாஷிடம் முதல் கட்ட விசாரணை நடத்தியதில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாகவும், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் தெரியவந்தது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

மேலும் அவர் ‘சமுதாயம்’ என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

17 வயது சிறுமிக்கு சினிமா ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததால் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img