vel murugan - 2026

தஞ்சாவூர் அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ளார்.

இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான மற்றொரு மாணவியும் படித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவர்.

இந்நிலையில் வேல்முருகன் அவருடைய மகளின் தோழிக்கு அவர் மகள் அனுப்புவதை போல தொடர்ந்து வாட்ஸ்அப்பில் மெஜேஜ் அனுப்பி வந்துள்ளார்.

இதனை நம்பிய அச்சிறுமியும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சென்றுள்ளார்.

அங்கிருந்தவாறு தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சிறுமிக்கு மிரட்டல் விடுத்தால் அச்சம் காரணமாக அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.

இக்கொடூரம் தொடர்ந்ததால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending