eye - 2026

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வாட்டாட்சியர் கலாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வருவாய் வட்டாட்சியராக பணிபுரிந்தவர் கலாவதி (51). இவருக்கு கடந்த மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து, பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், கடந்த வாரம் கண் பகுதியில் வலி ஏற்பட்டதால், கலாவதி திருப்பூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து, கலாவதிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பு பூஞ்சை நோயால் வட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம், திருப்பூர் மாவட்ட வருவாய் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending