puja - 2026

பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஐஸ் விற்பனை செய்து வந்த நிலையில், தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் வறுமையால் வாடி வந்துள்ளார்.

இந்நிலையில், பிரபுவுக்கு நண்பர்கள் மூலம் பரமத்திவேலூரை சேர்ந்த ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரபு வீட்டிற்கு வந்த ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க பூஜை செய்ய 50 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி கூறியதை நம்பி, பிரபு முதற்கட்டமாக 5 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி தனது பங்காளிகள் இரண்டு பேருடன் பிரபு வீட்டிற்கு சென்று பூஜை செய்து குழிதோண்டி உள்ளார். 12 அடி தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை.

இதனால், சுதாரித்துக்கொண்ட பிரபு புதையல் எடுக்கும் பணியை நிறுத்தும்படி கூறியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி பேசியபடி 50 ஆயிரம் பணத்தை தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வாய் பேச முடியாத படி செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்த பிரபு பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போலி ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி, அவரது பங்காளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending