பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி! மனமொடிந்து காதலன் தற்கொலை!

Published:

vaman raj
vaman raj

பிறந்தநாளுக்கு காதலி வாழ்த்து கூறாததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பை சேர்ந்தவர் யாதவ ராஜ். இவரது மகன் வாமன் ராஜ் (21). பி.காம் படித்துள்ளார்.

இந்நிலையில் வாமன் ராஜை காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது, அவர் அங்குள்ள சுடுகாடு ஒன்றின் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வாமன்ராஜ் பரிதாபமாக இறந்தார்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியநிலையில், இறந்துபோன வாமன்ராஜ் சமூக வலைதளம் மூலம் இளம் பெண் ஒருவருடன் நட்பாக பழகி, பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இந்நிலையில் வாமன்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய‌ நிலையில், அவருக்கு அந்த பெண் வாழ்த்து கூறவில்லை என்று தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வாமன்ராஜ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img