அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு

04 May27 irlandஅயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.

தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.

முன்னதாக கருக்கலைப்பு தடைச் சட்டதில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் தனது நாட்டின் “அமைதியான புரட்சி” இது என்று பாராட்டியுள்ளார்.

கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்று கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்தவுடன் அவர் இதனை தெரிவித்தார்.

தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அயர்லாந்து பிரதமர், கடந்த 20 வருடங்களாக அயர்லாந்தில் நடைபெற்று வந்த அமைதி புரட்சியின் உச்சக்கட்டத்தைதான் நாம் பார்க்கிறோம் என தெரிவித்தார்.

தங்களது சுகாதாரம் குறித்து பெண்கள் தங்களது முடிவுகளையும், தகுந்த வாய்ப்புகளையும் தேர்ந்தெடுப்பார்கள் என அயர்லாந்து வாக்காளர்கள் நம்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கருவில் உள்ள குழந்தைக்கும், கருவை சுமக்கும் பெண்களுக்கு உள்ளது போன்றே வாழ்வுரிமை உண்டு என்பதை கூறும் எட்டாவது சட்ட வரைவை நீக்க வேண்டுமா அல்லது தக்க வைக்க வேண்டுமா என மக்கள் தங்களது வாக்குகளை அளித்தனர்.

தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். பாலியல் வன்புணர்வு, ஆபத்தான கருச்சிதைவு ஆகிய சூழல்களில் கருக்கலைப்பு செய்ய இயலாது.

இந்த வருடத்தின் இறுதியில் புதிய கருக்கலைப்பு சட்டம் இயற்றப்படும் என வரத்கர் தெரிவித்தார்.