ராஜபாளையம் அருகே கோயில் வழிபாட்டில் இருதரப்பு மோதல்: விஎச்பி., சாலை மறியல்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
rajapalayam vhp
rajapalayam vhp

ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியார்புரத்தில் கோவிலில், வழிபாடு நடத்துவதில் கிராம மக்களுக்கு எதிராக வருவாய்த் துறை மற்றும் காவல்துறை செயல்படுவதாக கூறி, சாலை மறியல் நடத்தப் பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே, உள்ள சுந்தர நாச்சியார் புரம் பகுதியில், அம்பேத்கர் காலனியில் சக்தி காளியம்மன் என்ற கோவில் உள்ளது .இந்த கோவில் சாமி கும்பிடுவது, மற்றும் திருவிழா நடத்தும் சம்பந்தமாக வருவாய்த்துறை காவல்துறை அதிகாரியிடம் அனுமதி வாங்கி வழிபாடு செய்தனர்.

அப்பொழுது ,அதே பகுதியை சேர்ந்த வர்கீஸ்,  நந்தன் , பெரியாண்டவர் ஆகிய மூன்று நபர்களும், வழிபாடு செய்வதற்கு எதிராகவும் ,வழிபாடு செய்தவர்கள் மீது உங்களுக்கு இந்த இடத்தில் உரிமை இல்லை,  நாங்கள்தான் வழிபாடு செய்வோம் என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, கூறப்படுகிறது.

இதையடுத்து ,நேற்று திருவிழா நடத்திய போது, இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதே பகுதியை, சேர்ந்தவர் வீரபாண்டி என்ற 11 வயது சிறுவனை தாக்கியதாகவும், அதை தட்டி கேட்காமல்,  சார்பு ஆய்வாளர் சிறுவனை, மேலும் தாக்கி காயப்படுத்தியதாகவும், இதற்கு உடந்தையாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை செயல்படுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சரவண கார்த்திகேயன் தலைமையில், கிராம மக்கள் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை அனுமதி இல்லாமல் காவல்துறையில் புகார் அளிக்காமல், இவர்கள் சாலைமறியலில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது என, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் எடுத்துரைத்தார். இதை அடுத்து, அவர்களை அப்புறப்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டார். 

அதையடுத்து, 50 பேர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், தீர்வு கிடைக்கவில்லை என்றால், மாபெரும் போராட்ட நடத்தப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.