செவ்வாய் கிரகத்தின் புதிய படம்! நாசா வெளியீடு!

சற்றுமுன்
mass
mass

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவரை கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. ஏற்கெனவே ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருந்தது.

தற்போது, முன்பு எப்போதும் கண்டிராத புதிய படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தினை முதன் முறையாக படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்த படத்தினை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.