Tnpsc குரூப் 4: கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பாடத்திட்டம் வெளியீடு!

Published:

tnpsc - 2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்வதற்குத் தமிழ் மொழியில் தகுதி பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

அதில், பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.மேலும், தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் முறையில் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டுள்ளன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

மேலும் தமிழ் மொழித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிரிவு ‘பி’ விடைத்தாள் திருத்தப்படும். மேலும், 40 மதிப்பெண்களுக்கு மேல் பெறப்படும் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்து கொள்ளப்படும்.

தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டு, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்தியாவின் வரலாறு – பண்பாடு, இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்தியத் தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு – சமூக அரசியல் இயக்கங்கள், திருக்குறள், தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் என்ற தலைப்புகளில் பாடத்திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img