கிணற்றில் விழுந்த குட்டியானை! கோபத்தில் பேருந்தை தாக்க தொடங்கிய தாய்!

elephant 1 - 2026

தன்னுடைய குட்டி கிணற்றுக்குள் விழுந்ததால் ஆத்திரம் அடைந்த காட்டு யானை அங்கு சாலையில் நின்ற பயணிகள் பேருந்தை பலமாக தள்ளித் தாக்கத் தொடங்கியது.

யானையின் ஆத்திரத்தை தெரிந்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ராசகோவிந்தபுர் வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

சில நேரங்களில் அந்த யானைக்கூட்டம் அருகில் உள்ள கிராமத்துக்கு வருவதும் உண்டு. அப்படியாக காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைந்தது.

அந்தக் கூட்டத்தில் இருந்த யானைக் குட்டி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனால் யானைக்கூட்டமே பிளிறல் சத்தமிட்டு கிராமத்தினரை அலற வைத்தது.

ஆத்திரத்தில் யானைக் கூட்டம் அங்கும் இங்கும் ஓடின. அப்போது அவ்வழியில் பயணிகள் பேருந்தை பலமாக தள்ளித் தாக்கத் தொடங்கியது. யானையின் ஆத்திரத்தை தெரிந்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இதற்கிடையே யானைக்குட்டி தொடர்பாக வனத்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் 5 மணி நேர போராட்டத்துக்குபின் யானைக் குட்டியை மீட்டனர்.

இது குறித்து தெரிவித்த உள்ளூர்வாசி ஒருவர், ” திடீரென கோபமான யானை அங்கிருந்த பேருந்து பக்கமாக சென்று தாக்கத் தொடங்கியது. பேருந்து ஜன்னலை உடைத்தது. நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். நல்லவேளையாக யாருக்கும் பாதிப்பு இல்லை” என்றார்

யானைக்குட்டியை மீட்டது குறித்து பேசிய தீயணைப்புத்துறையினர், ” கிணறு 5 அடிதான் என்றாலும் தண்ணீர் இல்லை. அதனால் அருகில் உள்ள குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து கிணற்றில் நிரப்பினோம். நீரில் யானைக்குட்டி நீந்தி கொண்டே மேலே வந்தது’ என்றார்.

யானைக் குட்டியை கண்டதும் யானைக் கூட்டமே மகிழ்ச்சியில் பிளிறி சத்தமிட்டன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories