school 2 - 2026

பள்ளிகளை விட்டு இடைநின்ற மாணவர்கள் மீண்டும் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை!

சற்றுமுன் கல்வி தமிழகம்
school 2 - 2026

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதித்தல், வேலையை இழத்தல், வேலைவாய்ப்பு குறைபாடு விகிதம் அதிகரிப்பு, சிறு குறு தொழில் அழிவு, பண இழப்பு, கல்வி பாதிப்பு, வறுமை போன்ற பல சிக்கல்களை மக்கள் சந்தித்தனர்.

இதில், முக்கியமாக குழந்தைகளின் நலன் காக்க ஆன்லைன் கல்வி முறை செயல்படுத்தப்பட்டது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பல குழந்தைகளுக்கு இந்த ஆன்லைன் கல்லி முறை கிடைக்காமல் போனது.

பல குழந்தைகள் தனது கல்வியை இழந்தனர். மேலும், இந்த ஆன்லைன் கல்வி கற்ற முடியாமல் தனது கல்வியை விட்டதால் பல மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்று, பெற்றோரின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்பட சில காரணங்களினால் பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை பள்ளிக் கல்வித் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டது.

இதை சரிக்கட்டும் வகையில், பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்து 2 ஆயிரத்து 714 மாணவர்கள், 74 ஆயிரத்து 606 மாணவிகள், 2 திருநங்கைகள் என்று மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 320 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அவரவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.